ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் போட்டியில் டெல்லி - பெங்களூரு அணிகள் மோதுகிறது. அதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
கடைசி கட்டத்திற்கு தொடர் நகர்ந்துள்ள நிலையில், மும்பை அணியை தவிர்ந்த்து இதுவரை ப்ளே ஆஃப் சுற்றுக்கு வேறு எந்த அணியும் தகுதி பெறவில்லை.
இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால் ரசிகர்களிடையே போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.