தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

குவாலிஃபயர் 1: டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச்சைத் தேர்வுசெய்த ஸ்ரேயாஸ்! - delhi capitals vs mumbai indians

துபாய்: மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபயர் சுற்றின் முதல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

delhi capitals won the toss and choose to bowl
delhi capitals won the toss and choose to bowl

By

Published : Nov 5, 2020, 7:15 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து ப்ளே ஆஃப் சுற்றுகளுக்கு மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய அணிகள் முன்னேறின.

இவர்களுக்கு இடையிலான ப்ளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிஃபயர் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வுசெய்துள்ளார்.

குவாலிஃபயர் 1 போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் என்பதால், இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அணி விவரம்:ரோஹித் ஷர்மா (கேப்டன்), டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக், குர்ணால், பொல்லார்ட், ராகுல் சாஹர், கவுல்டர் நைல், போல்ட், பும்ரா.

டெல்லி அணி விவரம்: ப்ரித்வி ஷா, தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஸ்டோய்னிஸ், அக்சர் படேல், அஸ்வின், ரபாடா, நார்கியே, டேனியல் சாம்ஸ்.

இதையும் படிங்க:கோலியின் 32ஆவது பிறந்தநாள்: பிரபலங்கள் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details