கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச முடிவு செய்தது. அதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா 12 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டி காக் 33 ரன்கள் அடித்திருந்த நிலையில் சாம் கர்ரனிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - சவுரவ் திவாரி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர்.
அசத்தல் கேட்ச் பிடித்த டூ பிளேசிஸ் இதில் சூர்யகுமார் யாதவ் 17 ரன்களிலும், சவுரவ் திவாரி 42 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பாண்டியா சாகோதர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிடி அந்த அணியில் அதிகபட்சமாக சவுரவ் திவாரி 42 ரன்களை எடுத்தார். சென்னை அணி தரப்பில் இங்கிடி மூன்று விக்கெட்டுகளையும், ஜடேஜா, சஹார் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: 13ஆவது சீசனுக்காக செய்யப்பட்டுள்ள 10 மாற்றங்கள்...!