தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்!

சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

CSK vs KXIP TOSS UPDATE
CSK vs KXIP TOSS UPDATE

By

Published : Oct 4, 2020, 7:05 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.04) நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருவதால், இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சிஎஸ்கே: ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டுவைன் பிராவோ, கேதர் ஜாதவ், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, ஷர்துல் தாக்கூர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:கே.எல். ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், மந்தீப் சிங், கிளென் மேக்ஸ்வெல், நிக்கோலஸ் பூரான், சர்ப்ராஸ் கான், கிறிஸ் ஜோர்டன், ஹர்பிரீத் பிரர், முகமது ஷமி, ஷெல்டன் காட்ரெல், ரவி பிஷ்னோய்.

இதையும் படிங்க:பிரஞ்சு ஓபன்: சிமோனா ஹாலெப் அதிர்ச்சித் தோல்வி!

ABOUT THE AUTHOR

...view details