ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.
ஐபிஎல் 2020: பஞ்சாப்பை பந்தாடியது சிஎஸ்கே! - சென்னை vs பஞ்சாப்
சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2020: பஞ்சாப்பை பந்தாடியது சிஎஸ்கே!
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் அதிரடியான தொடக்கத்தைத் தந்தார்.
சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த மந்தீப் சிங் 27 ரன்களில் நடையைக் கட்டினார்.
Last Updated : Oct 5, 2020, 6:56 AM IST