காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ட்வெயின் பிராவோ சில நாட்கள் விளையாடமாட்டார் என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
பிராவோ காயம் குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் - Dwayne Bravo
கடைசி ஓவர் வீச முடியாததை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார். அவர் கடைசி ஓவரை வீச முடியாதது எங்களுக்கு துரதிர்ஷ்டவசமானது.
CSK coach Fleming opens up about Dwayne Bravo's injury
சனிக்கிழமை அன்று டெல்லியுடன் நடைபெற்ற போட்டியில், காயம் காரணமாக கடைசி ஓவரை வீசமுடியவில்லை. இதுகுறித்து சிஎஸ்கே அணியில் பயிற்சியாளர் பிளெமிங், பிராவோ மிகவும் மோசமாக காயமடைந்திருக்கிறார். அவர் சில காலம் விளையாடாமல் இருப்பது நல்லது. கடைசி ஓவர் வீச முடியாததை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார். அவர் கடைசி ஓவரை வீச முடியாதது எங்களுக்கு துரதிர்ஷ்டவசமானது. அவர் வீச முடியாத காரணத்தால்தான் ஜடேஜாவுக்கு கடைசி ஓவர் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்களுக்கு வேறு வழியில்லை என தெரிவித்தார்.