ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு சற்றும் பஞ்சமின்றி, ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் விருந்து படைத்துவருகிறது. இதில் இன்று (அக். 17) நடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.
சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
நடப்பு ஐபிஎல் சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதனால் முந்தைய போட்டியில் அடைந்த தோல்விக்குப் சிஎஸ்கே பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.