சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணி கெய்க்வாட் - டூ ப்ளஸிஸ் இணை களமிறங்கியது.
ஆட்டத்தில் தொடக்கத்திலேயே மும்பை அணியின் போல்ட் - பும்ரா இணை சென்னை அணியின் பேட்டிங்கை முழுவதுமாக உடைத்தது. கெய்க்வாட், ஜெகதீசன் ஆகியோர் ரன் எடுக்காமலும், ராயுடு 2 ரன்னிலும், டூ ப்ளஸிஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் வந்த ஜடேஜா 7 ரன்னில் ஆட்டமிழக்க, பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் சென்னை அணி 24 ரன்களுக்கு 45 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் அடுத்த ஓவரிலேயே கேப்டன் தோனி 16 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த தீபக் சாஹர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் 43 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் பறிபோனது.