கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இத்தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான லீக் போட்டிகள் அனைத்தும் துபாய், அபுதாபி, சார்ஜாவின் நடைபெற்று வந்தது. மேலும் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்திருந்தது.
அதன்படி இன்று (அக்.25) ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனுக்கான பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான நேரம் மற்றும் மைதானம் குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
நவம்பர் ஐந்தாம் தேதி நடைபெறவுள்ள முதல் தகுதிச்சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், நவ.06ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்று அபுதாபி மைதானத்திலும், எட்டாம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டம் அபுதாபி மைதானத்திலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளே ஆஃப், இறுதிப் போட்டிக்கான மைதானம் அறிவிப்பு
மேலும் நவம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:கெய்க்வாட் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது சிஎஸ்கே!