தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விராட் கோலியை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய கவாஸ்கர்; பதிலடி கொடுத்த அனுஷ்கா சர்மா! - சுனில் கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா

துபாய்: பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தின்போது கேட்ச் விட்ட விராட் கோலியை, அவரது மனைவியுடன் சேர்த்து விமர்சித்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Anushka Sharma hits back at Sunil Gavaskar for his 'distasteful' comments
Anushka Sharma hits back at Sunil Gavaskar for his 'distasteful' comments

By

Published : Sep 25, 2020, 6:23 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியின்போது பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, கே.எல். ராகுல் அடித்த இரண்டு கேட்சுகளை தவறவிட்டார். மேலும் பின்னர் பேட்டிங்கில் களமிறங்கிய கோலி, சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

இப்போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது தொலைக்காட்சி வர்ணனையாளராக இருந்த சுனில் கவாஸ்கர் விராட் கோலியை விமர்சிக்கும் வகையில் ‘‘லாக்டவுன் காலத்தில் விராட் கோலி அவருடைய மனைவியின் பந்து வீச்சை மட்டுமே எதிர்கொண்டார்’’ எனக் கூறி, சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இது குறித்து அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளபக்கத்தில் சுனில் கவாஸ்கரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ளப் பதிவில், “கவாஸ்கர் உங்களுடைய கருத்தானது வெறுக்கத்தக்கது. ஒருவடைய கணவரின் ஆட்டத்திற்கு அவருடைய மனைவியை நீங்கள் குற்றம் கூறியது ஏன்? இது குறித்து நீங்கள் விளக்கமளிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

நீங்கள் வர்ணனை செய்யும்போது ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுப்பீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் அதே மரியாதையை நீங்கள் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையா?

அனுஷ்கா சர்மாவின் சமூக வலைதளப்பதிவு

எனது கணவரின் செயல்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவிக்க உங்களுக்கு பல சிந்தனைகள் தோன்றியிருக்கும் என நம்புகிறேன். அனால் அவற்றை விடுத்து எனது பெயரைப் பயன்படுத்தினால் மட்டுமே உங்களது கருத்துக்கு பொருத்தமானவையாக அமைந்ததா?

கவாஸ்கர், இந்த விளையாட்டில் நீங்கள் ஒரு ஜாம்பவான் என்ற பட்டியலில் உள்ளீர்கள். ஆனால் நீங்கள் கூறிய கருத்து தவறானது. அதனை உங்களுக்கு உணர்த்தவே நான் விரும்புகிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:13வது ஐபிஎல் தொடரில் முதல் சதம் - ராகுல் சாதனை

ABOUT THE AUTHOR

...view details