தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சொல்வதற்கு ஒன்றும் இல்லை: விரக்தியில் கோலி - SRHvRCB

ஹைதராபாத்: ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் நாங்கள் சந்தித்து மிகவும் மோசமான தோல்வி என்றும், இதுகுறித்து கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றும் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தோல்வி குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை: கோலி

By

Published : Apr 1, 2019, 11:02 AM IST

ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்று போட்டியில், பெங்களூரு அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

போட்டி முடிவடைந்த பின், தோல்வி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில்,

ஐபிஎல் கிரிக்கெட்டில் இது எங்களுக்கு ஒரு மோசமான தோல்வி. இது குறித்து முழுமையாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை எதுவும் எங்களுக்கு சரியாக அமையவில்லை. பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்துப் பிரிவுகளிலும் எங்களை விட ஹைதராபாத் அணி சிறப்பாக செயல்பட்டது.

குறிப்பாக வார்னர், பேயர்ஸ்டோவ் ஆகியோர் பேட்டிங்கில் செட் ஆகிவிட்டதால், அவர்களை அவுட் செய்வது சற்று கடினமாகவே இருந்தது. இந்தத் தொடரில் நாங்கள் இன்னும் 11 போட்டிகளில் விளையாட உள்ளோம். இதனால், இனிவரும் போட்டிகளில், எங்களது முழுத் திறனை வெளிப்படுத்துவோம். ராஜஸ்தான் அணிக்கு எதிராக, விளையாட இருக்கும் அடுத்தப் போட்டி எங்களுக்கான போட்டியாக இருக்கும் எனக் கூறினார்.
ராஜஸ்தான் - பெங்களூரு இவ்விரு அணிகளும் இந்தத் தொடரில் ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால், இவ்விரு அணிகள் மோதும் போட்டியில் எந்த அணி, இந்தத் தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை ஜெய்ப்பூரில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details