12ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வீரர் சாஹல் 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் சாஹல், விராட் கோலிக்கு விருப்பமான பந்து வீச்சாளர்களில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சாஹல், "ஆர்.சி.பி அணியை எப்பொதும் குடும்பமாகவே பார்க்கிறேன். 2014ஆம் ஆண்டு முதல் இந்த அணியில் விளையாடி வரும் எனக்கு, ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். கேப்டன் விராட் கோலி தொடர்ந்து வீரர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் விதத்தில் செயல்படுகிறார்.