தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கேப்டனாக விராட் கோலி நிறைய கற்க வேண்டும்: கேடிச் விமர்சனம்! - Virat Kohli is still learning as skipper

கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, கேப்டனாக நிறைய விஷயங்களை கற்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கேடிச் விமர்சித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி

By

Published : Apr 16, 2019, 7:34 PM IST

12ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி விளையாடிய எட்டு போட்டிகளில் 7இல் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து பலரும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் தற்போதைய துணை பயிற்சியாளருமான கேடிச் பேசுகையில், விராட் கோலி குழுவாக எவ்வாறு இயங்குகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் கேப்டனாக இன்னும் நிறைய கற்க வேண்டும். பேட்ஸ்மேனாக மிகச்சிறந்த சாதனைகளை படைத்துவிட்டார். ஆனால் கேப்டனாக தடுமாறிவருகிறார்.

தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் இருந்து கோலி கற்றுவருகிறார். மேலும், பெங்களூரு அணி குழுவாக இணைந்து விளையாட தடுமாறுகிறது எனத் தெரிவித்தார்.

முன்னதாக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், விராட் கோலி கேப்டன்சி குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details