12ஆவது ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி கோலி - டி வில்லியர்ஸ் அதிரடியில் 174 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பெங்களூரு கேப்டன் கோலிக்கு அபராதம் விதிப்பு! - ஐபிஎல்2019
மொகாலி : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியின்போது பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துகொண்டதால் பெங்களூரு கேப்டன் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங்கின் போது பெங்களூரு அணி பந்துவீசுவதற்கு அதிக நேரங்களை எடுத்துக்கொண்டது. இதனால் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் தொடர்ச்சியாக இரவு நேரப் போட்டிகள் முடிவதற்கு அதிக நேரம் ஆகிறது என்ற குற்றச்சாட்டு பலராலும் எழுப்பப்பட்டது. மேலும், மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவுக்கும் பந்துவீச அதிக நேரங்கள் எடுத்துக்கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.