தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோனி, கம்பீருக்கு பின் 100 போட்டிகளுக்கு கேப்டனாக விளையாடிய கோலி! - Virat kohli captaining 100th IPL match

ஜெய்ப்பூர்: ஐபிஎல் போட்டிகளில் தோனி, கம்பீருக்கு பின் 100 போட்டிகளுக்கு கேப்டனாக விராட் கோலி விளையாடியுள்ளார்.

virat

By

Published : Apr 2, 2019, 8:46 PM IST

ஐபிஎல் தொடரில் 2012ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி, இன்றைய போட்டியோடு நூறு போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ளார். இவருக்கு முன் சென்னை அணியின் கேப்டன் தோனி 162 போட்டிகளிலும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கம்பீர் 129 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளனர். இதனால், நூறு போட்டிகளில் கேப்டனாக ஆடிய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார்.

இதுவரை கோலி தலைமையில் பெங்களூரு அணி பங்கேற்ற 99 போட்டிகளில் 44 போட்டிகளில் வெற்றியும், 50 போட்டிகளில் தோல்வியும், இரண்டு போட்டிகள் டிரா மற்றும் மூன்று போட்டிகளின் முடிவு எட்டப்படாமல் இருந்துள்ளது.

இந்த தொடரில் பெங்களூரு அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details