தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மோசமான சாதனையுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான வருண் சக்ரவர்த்தி! - Varun Chakravarthy

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் வருண் சக்ரவர்த்தி ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் ஓவரில் அதிக ரன்களை வழங்கிய அறிமுக வீரர் என்ற மோசமான சாதனை படைத்துள்ளார்.

மோசமான சாதனையுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான வருண் சக்ரவர்த்தி

By

Published : Mar 28, 2019, 7:36 PM IST

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகின்றன. இதில், ஈடன் கார்டன் கொல்கத்தா மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியின் மூலம் பஞ்சாப் அணிக்காக 8.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் போன வருண் சக்ரவர்த்தி ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மிகவும் பேசப்பட்ட வீரரான இவர், மூன்று ஓவர்களில் 35 ரன்களை வழங்கி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இதனிடையே, வருண் சக்ரவர்த்தி வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை கொல்கத்தா வீரர் சுனில் நரைன், மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி என 25 ரன்களை விளாசினார்.

இதன் மூலம், வருண் சக்ரவர்த்தி ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் ஓவரில் அதிக ரன்களை வழங்கிய அறிமுக வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் ஓவரில் அதிகமான ரன்களை வழங்கிய அறிமுக வீரர்கள் பட்டியல்:

வருண் சக்ரவர்த்தி, 2019 - 25 ரன்கள்

கேம்ரூன் ஒயிட், 2008 - 24 ரன்கள்

இஷான் மல்ஹோத்ரா, 2011 - 23 ரன்கள்

ஆஷ்லி நோஃப்கே, 2008 - 22 ரன்கள்

இஷ்வர் பாண்டே, 2013 - 21 ரன்கள்

ABOUT THE AUTHOR

...view details