தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மன்னிப்பு கேட்ட சிஎஸ்கே அணியின் 'பராசக்தி எக்ஸ்பிரஸ்'! - 'பராசக்தி எக்ஸ்பிரஸ்'

மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபயர் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் விட்டதற்கு சென்னை அணி வீரர் இம்ரான் தாஹிர் ட்விட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார்.

'பராசக்தி எக்ஸ்பிரஸ்'

By

Published : May 9, 2019, 1:55 PM IST

12ஆவது ஐபிஎல் சீசனுக்கான முதல் குவாலிஃபயர் போட்டியில் சென்னை அணி மும்பை அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யாரும் எதிர்பார்க்காதவாறு சென்னை மைதானத்திலேயே தோல்வியடைந்தது. இது குறித்து ரசிகர்கள் ட்விட்டர் பக்கங்களில் சோகத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் சென்னை அணி வீரர் இம்ரான் தாஹிர், மும்பை அணியிடம் தோல்வியடைந்து சென்னை அணியின் உண்மையான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் வருத்தமளிக்கிறது. நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். நிச்சயம் அடுத்தப் போட்டியில் நன்றாக செயல்படுவோம் என ட்விட்டரில் ரசிகர் ஒருவர் செய்த ட்வீட்டிற்கு பதிலளித்திருக்கிறார்.

மேலும் விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ள அடுத்தப் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details