தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோனியின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்! ஃபிளெமிங் பளீச் - சிஎஸ்கே அணி

சென்னை: சிஎஸ்கே அணிக்காக தோனி களமிறங்காதபோது அவரது இடத்தை யாரால் நிரப்ப முடியும் என்ற கேள்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் பதிலளித்துள்ளார்.

தோனி

By

Published : Apr 28, 2019, 3:07 PM IST

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங், பல ஆண்டுகளாக தோனி சென்னை அணிக்காக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மிகச்சிறந்த வீரர். அவருடைய இடத்தை நிரப்புவது மிகவும் கடினமே. தோனி ஆடாத நேரங்களில் அணியில் சில ஓட்டைகள் விழத்தான் செய்யும். அவர் இல்லாத இரண்டு ஆட்டங்களிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளோம். தோனி தலைமையின் கீழ் ஆடுகையில், வீரர்கள் பாதுகாப்பை உணர்கின்றனர். இதனை நிச்சயம் வேகமாக சரி செய்வோம்.

தோனி

தோனி ஆடாததன் தாக்கத்தை வெளிப்படையாவே உணர முடிந்தது. அணியின் மிகச்சிறந்த வீரர் ஆட முடியாமல் போகின்ற நேரத்தில் களத்திலிருப்பவர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பவர்-ப்ளே ஓவர்களில் விக்கெட்டுகளை கொடுப்பது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வரும் போட்டிகளில் இதனைச் சரி செய்வோம் எனத் தெரிவித்தார்.

சென்னை அணி அடுத்தப் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details