தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி முதல் பேட்டிங்! - ஹைதராபாத் vs மும்பை

ஹைதராபாத் : மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

Sport

By

Published : Apr 6, 2019, 8:11 PM IST

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் - மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபத் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி, இரண்டு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் விளையாடி வருகிறது. கடந்தப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தியுள்ளதால் இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார்னர் - பெயர்ஸ்டோவ் இணையை பும்ரா, பெஹ்ரண்டாஃப் கூட்டணி எவ்வாறு சமாளிக்கபோகிறது என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அதேபோல், ஹைதராபாத் அணி சொந்த மண்ணில் களமிறங்குவதால் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மிரட்டலான பேட்டிங் வரிசைக்கும் சிறப்பான பந்துவீச்சுக்கும் இடையேயானப் போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் மலிங்கா, யுவராஜ் சிங் ஆகியோருக்கு பதிலாக அல்ஸாரி ஜோசப், இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளனர்.

ஹைதராபாத் அணி கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்குகிறது.

ஹைதராபாத் அணி


ஹைதராபத் அணி விவரம்: புவனேஷ்வர் குமார் (கேப்டன்), ஜானி பெயர்ஸ்டோவ், வார்னர், விஜய் சங்கர், மணிஷ் பாண்டே, யூசஃப் பதான், தீபக் ஹூடா, முகமது நபி, ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, கவுல்.

மும்பை அணி

மும்பை அணி விவரம்: ரோஹித் ஷர்மா(கேப்டன்), டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, பொல்லார்ட், பும்ரா, அல்ஸாரி ஜோசப், பெஹ்ரண்டாஃப், ராகுல் சாஹர்.

ABOUT THE AUTHOR

...view details