தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐசிசி அங்கீகரித்த விதிமுறையை கையாண்ட அஷ்வினுக்கு பிசிசிஐ அறிவுரை!

ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன்-அவுட் செய்த அஷ்வினுக்கு, நாகரிகத்தைக் கடைபிடிக்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்த அஷ்வின்

By

Published : Mar 27, 2019, 8:48 AM IST

பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லரை பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் மன்கட் முறையில் ஆட்டமிழக்க செய்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அஷ்வினின் செயலை வெளிநாட்டு வீரர்கள் ஷேன் வார்னே உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அஷ்வின் கிரிக்கெட் விளையாட்டில் நாகரிகத்தைக் கடைபிடிக்க பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.

பட்லரை மன்கட் செய்த அஷ்வின்.

இதனிடையே ரசிகர்கள் பலரும் பஞ்சாப் கேப்டன் அஷ்வின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்-போடு (sportsmanship) விளையாட வேண்டும் என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் குறித்து பேசுவதால், பவுலர் பந்துவீசுவதற்கு முன்பாக பேட்ஸ்மேன் கிரீசைவிட்டு வெளியேறுவது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் தானா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், போட்டி முடிவடைந்தபின் பஞ்சாப் அணி வீரர் அஷ்வினோடு இங்கிலாந்து வீரர் பட்லர் கைகுலுக்காமல் சென்றது ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்க்கு எதிரானது எனவும் கருத்து கூறி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details