சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த தென்னாப்பிரக்க வீரர் லுங்கி நிகிடி, காயம் காரணமாக நடைபெற்று வரும் தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில், அவருக்கு பதிலாக தற்போது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஸ்காட் குஜ்ஜெலின் (Scott Kuggeleijn) சிஎஸ்கே அணியில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அடுத்த வாரத்திற்குள் சென்னை அணியில் இணைவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியில் நியூசிலாந்து வீரர்! - ஸ்காட் குஜ்ஜெலின்
சென்னை: காயம் காரணமாக சென்னை அணியிலிருந்து விலகிய தென்னாப்பிரிக்கா வீரர் லுங்கி நிகிடிக்கு பதிலாக, நியூசிலாந்து வீரர் ஸ்காட் குஜ்ஜெலின் சேர்க்கப்பட்டுள்ளார்.

27 வயதான, குஜ்ஜெலின் நியூசிலாந்து அணிக்காக, இதுவரை இரண்டு ஒருநாள், நான்கு டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். இதனிடையே, சிஎஸ்கே அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி, குடும்ப சூல்நிலை காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.