தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் பந்துவீச மாட்டேன்: மலிங்கா - மலிங்கா

மும்பை: உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக பந்துவீச தனக்கு பயமாக உள்ளது என இலங்கை வீரர் மலிங்கா தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா

By

Published : Apr 17, 2019, 10:26 AM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஹர்திக் பாண்டியா (இந்திய வீரர்) மற்றும் லசித் மலிங்கா (இலங்கை வீரர்) ஆகியோர் மும்பை அணிக்காக விளையாடி வருகின்றனர். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணி வெற்றிபெற இரண்டு ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா, பவான் நெகி வீசிய 19ஆவது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்துவிட்டார்.

ஹர்திக் பாண்டியா அதிரடி பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் அதிரடி ஆட்டத்தில் புது விஸ்வரூபம் எடுத்துள்ளார் என்றே கூறலாம். 7-வது வீரராக களமிறங்கும், அவருக்கு ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில்தான் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. இருப்பினும், தனக்கு கிடைக்கும் வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்.இந்தத் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஸ்ட்ரைக் ரேட் 191. 75 உடன் 186 ரன்களை அடித்துள்ளார். அதில், நான்கு முறை நாட்அவுட் பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் குறித்து மலிங்கா கூறுகையில்,

பெங்களூருக்கு எதிரானப் போட்டியில் ஹர்திக் பாண்டியா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆட்டத்தை ஃபினிஷ் செய்தார். உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக பந்துவீசுவதற்கு எனக்கு பயமாக உள்ளது என்றார்.

பெங்களூருக்கு அணிக்கு எதிரானப் போட்டியில் மலிங்கா, 31 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி ஜூலை 6-ம் தேதி ஹெட்டிங்லி நகரில் நடைபெறவுள்ளது. மலிங்கா கூறியது போல இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக அவர் எப்படி பந்துவீசுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details