12ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி வீரர் சாம் பில்லிங்ஸ் ஆட வந்தார். சில போட்டிகளில் மட்டுமே களமிறங்கிய அவர், இங்கிலாந்தில் கவுண்டி தொடர் தொடங்கவுள்ளதால் சில நாட்கள் முன்பாகவே சொந்த நாட்டுக்கு பறந்தார்.
காயமடைந்த சாம் பில்லிங்ஸ்! - சாம் பில்லிங்ஸ்
லண்டன்: சிஎஸ்கே அணி வீரரும், கெண்ட் கிரிக்கெட் கிளப் அணி கேப்டனுமான சாம் பில்லிங்ஸ், இங்கிலாந்து கவுண்டி தொடர் தொடங்குவதர்கு முன்பாக காயமடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
sam billings
இந்நிலையில் கெண்ட் கிரிக்கெட் அணி கேப்டனான சாம் பில்லிங்ஸ், பயிற்சியின்போது காயமடைந்து சில நிமிடங்களிலேயே மைதானத்தைவிட்டு வெளியேறியுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
27 வயதாகும் சாம் பில்லிங்ஸ், உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.