தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹைதராபாத்தை வீழ்த்தி ப்ளே-ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ராஜஸ்தான்? - ரஹானே

ஜெய்ப்பூர்: ஹைதாராபாத் அணிக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று ப்ளே-ஆஃப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் அணி தக்க வைக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்

By

Published : Apr 27, 2019, 12:05 PM IST

12ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான்-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. தற்போது ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு அனைத்து அணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய அணிகள் இப்போது சொதப்பியும், சொதப்பிய அணிகள் சிறப்பாக ஆடியும் வருகின்றன.

தொடரை சிறப்பாகத் தொடங்கிய ஹைதராபாத் அணி, அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டுபோய் உள்ளது. அதேபோல் தொடரின் ஆரம்பத்தில் 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற ராஜஸ்தான அணி, தற்போது அடுத்ததடுத்த வெற்றிகளால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித்

இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெறும் பட்சத்தில், ஹைதராபாத் அணிக்கு புள்ளிப் பட்டியலில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தால் தொடரிலிருந்து வெளியேரும் நிலை ஏற்படும்.

ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை பெரும்பாலும் வார்னர், பெயர்ஸ்டோவ், மனீஷ் பாண்டே ஆகியோரை நம்பி வந்த நிலையில், பெயர்ஸ்டோவ் இங்கிலாந்துக்கு பறந்தது ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வார்னர் - பெயர்ஸ்டோவ்

அதேபோல் ராஜஸ்தான் அணியிலிருந்து பட்லர், ஆர்ச்சர் ஆகியோர் நாடு திரும்பியதால், ராஜஸ்தான் அணி முக்கிய வீரர்களை இழந்துள்ளது. எனவே ரஹானே, ஸ்மித், சாம்சன் ஆகியோரை மட்டுமே பேட்டிங்கில் ராஜஸ்தான் அணியினர் நம்பியுள்ளனர்.

இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details