முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்களை குவித்தது. 162 ரன் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் - ரியான் பராக் இணை மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களின் பந்துகளை பந்தாடினர்.
மும்பையை பந்தாடிய ராஜஸ்தான் - சிறப்பான சம்பவம்...! - RR vs MI 1st inning
ஜெய்ப்பூர்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
இதில், ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் 19 பந்துகளுக்கு 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து வந்த ரியான் பராக் 43 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அப்போது களத்தில் இருந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நாலா பக்கமும் பந்துகளை சிதறவிட்டு 48 பந்தில் 59 ரன்களை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
கடைசி ஒவரில் அணியின் வெற்றிக்கான நான்கு ரன்களை அடித்து ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்தார். இந்த வெற்றியின் மூலம் இதுவரை நடந்து முடிந்த ஒன்பது ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.