12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், டெல்லி அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.குறிப்பாக, எலிமினேட்டர் போட்டியில், இவர் 49 ரன்களை விளாசினார். இதனால், அந்த அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தி, இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியது.
ரிஷப் பந்த் மாடர்ன் டே கிரிக்கெட்டின் சேவாக்!
டெல்லி வீரர் ரிஷப் பந்த் தற்போதைய தலைமுறையின் சேவாக் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்த்
இந்நிலையில், ரிஷப் பந்த் ஆட்டத்தை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சஞ்சய் மஞ்சரேக்கர், "ரிஷப் பந்த் இந்த தலைமுறையின் சேவாக். அவரை நீங்கள் அணியில் தேர்வு செய்யுங்கள் அல்லது தேர்வு செய்யாமல் போங்கள். ஆனால், அவரது ஆட்டத்தை மாற்ற மட்டும்முயற்சி செய்யாதீர்கள். அவரை அவர் போக்கிலேயே விட்டுவிடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில், ரிஷப் பந்த் இதுவரை விளையாடிய 15 போட்டிகளில் 450 ரன்களை விளாசியுள்ளார்.