தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யார்? பெங்களூரு-ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

பெங்களூரு - ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!

By

Published : Apr 2, 2019, 10:47 AM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 13 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் உள்ளன.

இந்தத் தொடரில் இவ்விரு அணிகளிலும் நல்ல வீரர்கள் இடம்பெற்று இருந்தும் ஏன் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. இந்நிலையில், ஜெய்ப்பூரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.தொடர் தோல்விகளை சந்தித்துவரும் இவ்விரு அணிகளில் எந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெங்களூரு அணியை பொறுத்தவரையில்கோலி - அணிதேர்விலும், எந்த வீரர்களை எந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இல்லை. ஆட்டத்துக்கு ஏற்றவாறு அணியின் பேட்டிங் வரிசையை அவர் மாற்றிக்கொண்டு வருகிறார். டிவில்லியர்ஸ், கோலி இருவர்களின் பேட்டிங்கை நம்பியே பெங்களூரு அணி உள்ளது.

இதைத்தொடர்ந்து, பெங்களூரு அணியின் மற்றொரு பிரச்சனை, நான்கு வெளிநாட்டு வீரர்களை தேர்ந்தெடுப்பது. மொயின் அலி, டி வில்லியர்ஸை தவிர காலின் டி கிராண்ட்ஹொம், ஹெட்மயர் ஆகியோர் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் அணிக்கு எந்த விதத்திலும் தங்களது திறமையை வெளிப்படுத்தவில்லை.

இதனால், இன்றையப்போட்டியில், பெங்களூரு அணியில் டி கிராண்ட்ஹொமுக்கு பதிலாகடிம் சவுதி சேர்க்கப்படலாம்என கூறப்படுகிறது. அதேசமயம், பெங்களூரு அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டால் பேட்டிங், பந்துவீச்சு எனகோலிக்கு கூடுதல் பலம் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியின் மூலம் கோலி 100ஆவது முறையாகபெங்களூரு அணியின் கேப்டனாக களமிறங்கவுள்ளார்.இதனால், இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் அவர் பெங்களூரு அணியை வெற்றிபெற வைத்து, அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மறுமுனையில், ராஜஸ்தான் அணியின் முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய பட்லர் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சொதப்பினார். ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது மிகவும் அவசியாகியுள்ளது.

பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்து பிரிவுகளிலும் அசத்திவருகின்றனர். ஆனால், அவர்களது பந்துவீச்சு கூட்டணி மிகவும் பலவீனாகவே உள்ளது.

இந்தத் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது கோலி தலைமையிலான பெங்களூரு அணியா? அல்லது ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியா? என்பது இன்றைய ஆட்டத்தில் தெரிந்துவிடும். இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

ABOUT THE AUTHOR

...view details