12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 45ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்திருந்தது.
ஹைதராபாத் அணி தரப்பில் மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 61 ரன்களை விளாசினார். ராஜஸ்தான் அணி சார்பில் வருண் ஆரோன், ஸ்ரேயாஸ் கோபால், ஓஷேனே தாமஸ், ஜெய்தேவ் உனாத்கட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, 161 ரன் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணியில், ரஹானே, லிவிங்ஸ்டன் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர். இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 78 ரன்களை சேர்த்த நிலையில், லிவிங்ஸ்டன் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரஹானே 39 ரன்களில் நடையைக் கட்டினார். இதனால், ராஜஸ்தான் அணி 11.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை எட்டியிருந்தது.