தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மும்பையிடம் த்ரில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்! - RRvMI

மும்பை: மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

By

Published : Apr 13, 2019, 8:18 PM IST

மும்பை வான்கடே மைதானஇத்தில் நடைபெற்ற 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 81, ரோஹித் ஷர்மா 47 ரன்களை அடித்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து, 188 ரன்கள் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணியில், கேப்டன் ரஹானே, ஜாஸ் பட்லர் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர். இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களை சேர்த்த நிலையில், 7ஆவது ஓவரில் ரஹானே 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்து நேர்த்தியான பேட்டிங்கை வெளிபடுத்திய வந்த பட்லர் அரைசதம் விளாசினார். அல்ஸாரி ஜோசப் வீசிய 18வது ஓவரில் பட்லர் அதிரடி மோடுக்கு மாறினார். அந்த ஓவரில் அவர் நாலாப்புறமும் 6,4,4,4,4,6 என 28 ரன்களை சேர்த்தார். இதைத்தொடர்ந்து, அடுத்த ஓவரிலேயே பட்லர் 89 ரன்களில் ராகுல் சஹாரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வெறும் 43 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசினார்.

இதனால், ராஜஸ்தான் அணி 13.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து களத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் - சஞ்சு சாம்சன் இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 16.4 ஓவர்களில் 170 ரன்களை ராஜஸ்தான் அணி எடுத்திருந்தது. இதனால், போட்டியில் வெற்றிபெற அந்த அணிக்கு 20 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணி சரிவை நோக்கி சென்றது.

பும்ராவின் பந்துவீச்சில் சஞ்சு சாம்சன் 31 ரன்களிலும், குருணால் பாண்டியாவின் பந்துவீச்சில் ராகுல் திரிபாதி மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா ஒரு ரன்னுடனும் நடையைக் கட்டினர். இதனால் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து, பும்ரா வீசிய 19ஆவது ஓவரின் முதல் பந்தில் ஸ்டீவ் ஸ்மித் அவுட் ஆனார். இதனால், ராஜஸ்தான் அணி கடைசி 8 பந்துகளில் நான்கு ரன்களை மட்டுமே அடித்து நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தால் ஆட்டம் சுடுபிடிக்கத் தொடங்கியது.

இந்த இக்கட்டான தருணத்தில், களத்தில் இருந்த கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் மனம் தளராமல் ஆடி ரன்களை சேர்த்தனர். இதனால் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் நான்கு ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில், ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் கோபால் மூன்றே பந்துகளில் ஆட்டத்தை முடித்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி இப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details