தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டெல்லி அசத்தல் பவுலிங்: 167 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்!

மொகாலி: டெல்லி அணி வெற்றி பெற 167 ரன்களை இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயம் செய்துள்ளது.

dc

By

Published : Apr 1, 2019, 10:03 PM IST

இன்றைய ஐபிஎல் தொடரில் பஞ்சாப் - டெல்லி அணிகள்மோதும் போட்டி மொகாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக ராகுல்-சாம் கரண் களமிறக்கப்பட்டனர். முதல் விக்கெட்டுக்கு 15 ரன்கள் சேர்ந்த நிலையில், ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அதைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரானசாம் கரண் 20 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த அகர்வால் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகி 6 ரன்களில் வெளியேற, பஞ்சாப் அணியின் நிலை மோசமாகியது. பின்னர் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் - டேவிட் மில்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் தொடக்கத்தில் சிறிது நேரம் நிதானமாக ஆடி பஞ்சாப் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

பின்னர் அதிரடிக்கு மாறிய இந்த இணை 13 ஓவர்களில் பஞ்சாப் அணியின் ஸ்கோரை 117 ரன்களாக உயர்த்தியது. 14-வது ஓவரில்சர்ஃபராஸ் கான் 39 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் மந்தீப் சிங் களமிறங்கினார்.

ஒருமுனையில் அதிரடியாக ஆடிய மில்லர், 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேற, பஞ்சாப் அணி 137 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து வந்த வில்ஜோயன் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் அஷ்வின் 3, முருகன் அஷ்வின் 1, ஷமி ரன் ஏடும் எடுக்காமல் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மந்தீப் சிங் 23 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியில் அதிகபட்சமாக மோரிஸ் 3 விக்கெட்டுகளும், ரபாடா, லெமிச்சானே தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ABOUT THE AUTHOR

...view details