இது குறித்து அவர் கூறுகையில்,
'நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம்- பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்கும், அணியின் ஆலோசகர் கங்குலியும்தான். இருவருக்கும் அணியில் உள்ள வீரர்களை ஊக்குவித்து எப்படி மேட்ச் வின்னர்களாக மாற்ற வேண்டும் என நன்கு தெரியும்.
பேட்டிங், பந்துவீச்சு என எங்களது அணி சரியான நிலையில் உள்ளது. ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா போன்ற இந்திய வீரர்கள் - காலின் இங்ரம், முன்ரோ போன்ற வெளிநாட்டு வீரர்களுடன் சேர்ந்து நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொண்டுவருகின்றனர்.11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டெல்லி அணியில் இணைந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' எனத் தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், டெல்லி அணி விளையாடிய 12 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்வி என 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம், 7 வருடங்களுக்குப் பிறகு டெல்லி அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தத் தொடரில், ஷிகர் தவான் விளையாடிய 12 போட்டிகளில் 5 அரைசதம் உட்பட 423 ரன்களை குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.