தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டெல்லிக்காக அதிக வெற்றிகளைப் பெற்றுத்தருவார் பந்த் : பாண்டிங் நம்பிக்கை! - CSKvsDC

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அதிக வெற்றிகளை ரிஷப் பந்த் பெற்றுத்தருவார் என டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங்-கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்

By

Published : Mar 26, 2019, 12:04 PM IST

12 ஆவது ஐபிஎல் சீசனுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அனியின் இளம் வீரர் ரிஷப் பந்த் மும்பை அணிக்கு எதிராக 27 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன்மூலம் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் பந்த் குறித்து பயிற்சியாளர் பாண்டிங் பேசுகையில், மிகச்சிறந்த வீரராக ரிஷப் பந்த் உருவாகியுள்ளார். மும்பை அணிக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பந்த், டெல்லி அணிக்காக இன்னும் நிறைய வெற்றிகளை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. டெல்லி அணிக்காக நிச்சயம் சிறந்த ஃபினிஷராக வலம் வருவார் என பாண்டிங் கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை நடைபெறவுள்ள போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் மோதவுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details