தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அன்பில் திளைத்த தல தோனி! - மும்பை

மும்பை : மும்பை அணிக்கு எதிரானப் போட்டிக்கு பின், சென்னை அணி கேப்டன் தோனியை மூத்த ரசிகை ஒருவர் சந்தித்துப் பேசிய வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டிங்காகி வருகிறது.

dhoni

By

Published : Apr 4, 2019, 6:08 PM IST

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. அதில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. போட்டிக்குப் பின்னர், மூத்த ரசிகைஒருவர் தல தோனியை நேரில் சந்தித்தார்.

அப்போது, நான் தோனிக்காக மட்டுமே இங்கு வந்துள்ளேன் (i am here only for Dhoni) என்ற வாசகம் அடங்கிய பெயர் பலகையைதோனிக்கு வழங்கி, தனது குழந்தையிடம் பேசுவதுபோல் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

தோனியும் அவருடன் புகைப்படம் எடுத்து, தனது ஜெர்சியில் ஆட்டோகிராஃப் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்வு உலகம் முழுவதுமுள்ள தோனி ரசிகர்களை பரவசமடையசெய்துள்ளது. தற்போது இதன் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டிங்காகி வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details