தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏலத்தில் 8.4 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மாயஜால சுழற்பந்துவீச்சாளரான இவர், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறாரா வருண் சக்ரவர்த்தி? - வருண் சக்ரவர்த்தி
மொகாலி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி காயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவர், அறிமுக போட்டியின் முதல் ஓவரிலேயே அதிக ரன்களை வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்திருந்தார். அவரது ஓவரை எதிர்கொண்ட சுனில் நரைன் மூன்று சிக்ஸர், ஒரு பவுண்டரி என 25 ரன்களை சேர்த்தார். பின், அடுத்த இரண்டு ஓவரில் அவர் 10 ரன்களை மட்டுமே வழங்கி, நிதிஷ் ராணாவின் விக்கெட்டை கைப்பற்றினார்.
அதன்பிறகு, பஞ்சாப் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் இவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனிடையே ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது இவரது விரலில் காயம் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து பஞ்சாப் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், வருண் சக்ரவர்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த காயத்தில் இருந்து பூரண குணமடைந்து அவர் முழு உடற்தகுதியுடன் அணியில் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது எனத் தெரிவித்தார்.