தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் தன்மை குறித்து தோனி வருத்தம்! - Kolkata vs Chennai

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச்சின் தன்மை, பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்தது போலவே, கொல்கத்தா போட்டியிலும் இருந்ததாக தோனி வருத்தம் தெரிவித்துள்ளார்.

MSD

By

Published : Apr 10, 2019, 9:48 AM IST

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 108 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 17.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. போட்டிக்கு பின்னர் பேசிய சென்னை கேப்டன் தோனி, திரும்பவும் குறைவான இலக்கைக் கொண்ட ஆட்டத்தை ஆடியிருக்கிறோம். முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக ஆட்டத்தில் பிட்ச் எவ்வாறு இருந்ததோ அதேபோல் இந்த போட்டியில் பிட்ச் இருந்தது. போட்டியை ரசிக்க வந்த ரசிகர்களுக்கு இது நல்ல அனுபவமாக இருக்காது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக ஆடுகின்றனர். பஜ்ஜி, தாஹீர் அற்புதமாக எதிரணியை திணறடிக்கின்றனர். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். சென்னை மைதானத்திற்கு ஏற்றவாறுதான் கடந்த சீசனில் வீரர்களை ஏலத்தில் வாங்கினோம் எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details