இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை அணியின் கேப்டனுமான தோனியின், ஸ்டெம்பிங்கில் சிக்காத வீரர்களே இல்லை என்று கூறலாம். இவரது ஸ்டெம்பிங்கில் தந்தையும், மகனும் சிக்கியுள்ளதுதான் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.
நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில், சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
இதில், ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் தோனியின் ஸ்டெம்பிங்கில் ஆட்டமிழந்தார். முன்னதாக, 1999-2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சி கிரிக்கெட் டெஸ்ட் தொடரில், அசாம் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பீகார் அணிக்காக விளையாடினார். இதில், ரியான் பராக்கின் தந்தையான பராக் தாஸ் தோனியிடம் ஸ்டெம்பிங் ஆனார்.
இதன் மூலம் அப்பா, மகன் இருவரையும் ஸ்டெம்பிங் செய்த வீரர் தோனி என்ற ருசிகரமான சாதனையை தோனி படைத்துள்ளார். இந்த தகவலை பிரபல கிரிக்கெட் வர்ணணையாளரான ஹர்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.