தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இரண்டு முறை 800 பிளஸ்... ஐபிஎல் கிரிக்கெட்டில் 'சின்ன தல ரெய்னாவின் சூப்பர் சாதனை'! - தோனி

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட்டில் இரண்டு அணிகளுக்கு எதிராக 800க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா படைத்துள்ளார்.

சின்னதல ரெய்னாவின் சூப்பர் சாதனை

By

Published : Apr 15, 2019, 10:42 AM IST

சென்னை ரசிகர்களால் ‘சின்ன தல’ என்றழைக்கப்படும், சுரேஷ் ரெய்னா நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மூலம் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஈடன் கார்டன் கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின.

இதில், சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 162 ரன்கள் இலக்குடன் ஆடிய சென்னை அணியில் வாட்சன், டு பிளசிஸ், தோனி, கேதர் ஜாதவ், ராயுடு ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினாலும், மறுமுனையில் சுரேஷ் ரெய்னா சிறப்பாக ஆடினார். 42 பந்துகளில் 7 பவுண்டரி , ஒரு சிக்சர் என 58 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.

இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் இரண்டு அணிகளுக்கு எதிராக 800க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

எதிரணிகளுக்கு எதிராக அதிகமான ரன்களை அடித்த வீரர்கள் பட்டியல்:

  1. ரெய்னா 818 ரன்கள் (கொல்கத்தாவுக்கு எதிராக)
  2. ரெய்னா 803 ரன்கள் (மும்பைக்கு எதிராக)
  3. கோலி 802 ரன்கள் (டெல்லிக்கு எதிராக)
  4. கெயில் 797 ரன்கள் (பஞ்சாப் அணிக்கு எதிராக)
  5. வார்னர் 762 ரன்கள் (கொல்கத்தாவுக்கு எதிராக)
  6. ரெய்னா 761 ரன்கள் (பஞ்சாப் அணிக்கு எதிராக)

ABOUT THE AUTHOR

...view details