தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சூப்பர் ஓவரில் ஹைதராபாத்தை வீழ்த்தி பிளே-ஆப் தகுதி பெற்ற மும்பை அணி

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது.

Mumbai

By

Published : May 3, 2019, 3:43 AM IST

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 51ஆவது லீக் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற மும்பை அணி செய்ய தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் குவிண்டன் டி காக் - ரோஹித் ஜோடி சிறப்பாக ஆடத் தொடங்கியது. பின்னர் சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் விழுந்த போதிலும், நிலைத்து ஆடிய டிகாக் 69 ரன்கள் (58 பந்து 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அரைசதம் அடித்த குவிண்டன் டிகாக்

இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது. ஹைதராபாத் பந்துவீச்சில் கலீல் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான சாஹா 25, கப்தில் 15 எடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் அந்த அணியின் மனீஷ் பாண்டே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவைப்படவே ஹர்திக் பாண்டியா அந்த ஓவரை வீசினார்.

பொறுப்புடன் ஆடிய மனீஷ் பாண்டே

பரபரப்பான கட்டத்தில் நான்காவது பந்தில் முகமது நபியும் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஐந்தாவது பந்தில் மனீஷ் பாண்டே 2 ரன்கள் எடுக்க, ஆட்டத்தின் இறுதி பந்தில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை உருவானது. அப்போது பாண்டியா வீசிய லென்த் டெலிவரியை மிட்-விக்கெட் திசையில் பாண்டே சிக்ஸராக அடித்ததால் மேட்ச் டிரா ஆனது.

பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்களை மட்டுமே எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய மும்பை அணி மூன்றே பந்தில் 9 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 16 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதோடு, மூன்றாவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details