தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மன்கட் செய்ய முயற்சித்த நரைனுக்கு பல்ப் தந்த கிங் கோலி! - சுனில் நரைன்

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தன்னை மன்கட் முறையில் அவுட் செய்ய வேண்டும் என்று நினைத்த சுனில் நரைனின் முயற்சியை விராட் கோலி தவிடுபொடி ஆக்கியுள்ளார்.

மன்கட் செய்ய முயற்சித்த நரைனுக்கு பல்ப் தந்த கிங் கோலி

By

Published : Apr 20, 2019, 9:59 AM IST

Updated : Apr 20, 2019, 10:07 AM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதின. இதில், கோலி தலைமையிலான பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தினேத் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியிடம் த்ரில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில், தனது சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்திய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் 5ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதனிடையே, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த விராட் கோலியை மன்கட் முறையிலாவது அவுட் செய்ய வேண்டும் என சுனில் நரைன் நினைத்தார். ஆனால், அவரது கனவை விராட் கோலி வீணாக்கியது மட்டுமில்லாமல், அவருக்கு தனது செய்கை மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சுனில் நரைன் வீச வந்த 18ஆவது ஓவரின் கடைசி பந்தை, பெங்களூரு வீரர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் எதிர்கொள்ள காத்திருந்தார். அப்போது, சுனில் நரைன் பந்து வீசாமல் நான் ஸ்ட்ரைக்கில் இருந்த கோலி க்ரீஸை விட்டு வெளியேறுகிறாரா என்று பார்த்தார். ஆனால், கோலிதான் கில்லாடி ஆயிற்றே அவர் தனது பேட்டினை மட்டும் க்ரீஸில் இருந்து எடுக்கவே இல்லை. இதனால், சுனில் நரைனின் முயற்சி வீண் போனது. ஐபிஎல் கிரிக்கெட்டின் அதிகார்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

Last Updated : Apr 20, 2019, 10:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details