ஐபிஎல் கோப்பையை வெல்லாததால், இந்திய கேப்டன் விராட் கோலி சிறந்த கேப்டன் இல்லை. தோனி, ரோஹித் சர்மா ஆகியோரை ஒப்பிடுகையில், கோலி கேப்டன்ஷிப்பில் நிறைய முன்னேற வேண்டியுள்ளது. பெங்களூர் அணி அவரை கேப்டன்ஷிப்பில் இருந்து தூக்காமல் இருப்பதற்கு அவர் நன்றிக் கடன் பட்டுள்ளார் எனக் கூறியிருந்தார்.
கோலிக்கு ஆதரவு தெரிவித்த மதன் லால்! - கவுதம் கம்பீர்
டெல்லி : கோலி குறித்து கவுதம் கம்பீர் கூறிய கருத்துக்கு முன்னாள் வீரர் மதன் லால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மதன் லால்
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய முன்னாள் வீரர் மதன் லால் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், கம்பீரின் கருத்தை நான் எதிர்க்கிறேன். இதுவரை யாரும் வென்றிறாத ஆஸ்திரேலியத் டெஸ்ட் தொடரை வென்று கோலி சாதனைப் படைத்துள்ளார். இந்திய அணிக்குள் கோலி கொண்டு வந்துள்ள மனநிலை, யாரும் செய்திராதது. கேப்டன்ஷிப்பில் மிகவும் வேகமாய் கோலி தன்னை மெருகேற்றி கொள்வார், என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.