மொகாலியில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.இதனிடையே, மும்பை வீரர் குருணல் பாண்டியா, பஞ்சாப் வீரர் மயங்க் அகர்வாலை மன்கட் செய்ய முயற்சித்தார்.
ஆட்டத்தின் 10-வது ஓவரின் நான்காவது பந்தை வீச வந்த அவர், நான் ஸ்ட்ரைக்கில் இருந்த மயங்க் அகர்வால் கிரீஸைவிட்டு வெளியே சென்றதை கவனித்தார். இதன் பின், மன்கட் முறையில் அகர்வாலை அவுட் செய்யும் வாய்ப்பு கிடைத்தும் அவர் அதை செய்யவில்லை.