கிரிக்கெட் வீரர்கள் களத்தில் செய்யும் தவறுகளை வைத்து விழிப்புணர்வு விளம்பரங்களை உருவாக்குவது ட்ரெண்டாகி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பும்ரா வீசிய நோ-பால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதனை வைத்து ஜெய்ப்பூர் போலீஸார் சாலை பாதுகாப்பு விளம்பரத்தை வெளியிட்டனர்.
அஷ்வினின் மன்கட் செயலை விளம்பரத்துக்கு பயன்படுத்திய கொல்கத்தா போலீஸ்! - bumrah no-ball advertisement
ராஜஸ்தான் வீரர் பட்லரை மன்கட் முறையில் அஷ்வின் அவுட் செய்த புகைப்படத்தை கொல்கத்தா போலீஸார் சாலை பாதுகாப்பு விளம்பரத்துக்கு பயன்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
அதேபோல் தற்போது, ராஜஸ்தான் வீரர் பட்லரை பஞ்சாப் கேப்டன் அஷ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அஷ்வினின் மன்கட் செயலை வைத்துசாலை பாதுகாப்பு விளம்பரத்தை கொல்கத்தா போலீஸ் வெளியிட்டுள்ளது.
அதில், எல்லைக் கோட்டை தாண்டியதால் பட்லர் அவுட் செய்யப்பட்டார் என்பதையும், டிராபிக் சிக்னலில் எல்லைக் கோட்டை தாண்டினால் விபத்து ஏற்படும் என்பதையும் இணைத்து மக்களுக்கு விழிப்புணர்வு விளம்பரத்தை உருவாக்கி, அதனை கொல்கத்தா போலீஸார் வெளியிட்டுள்ளனர்.