தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கம்பீருக்கு கோலி பதிலடி! - gautam gambhir

சென்னை : ஐபிஎல் கோப்பைகள் வெல்வதை வைத்து எனது கேப்டன்சியை எடைப் போட்டால், எனக்கு கவலையில்லை என பெங்களூர் கேப்டன் விராட் கோலி கம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

விராட் கோலி

By

Published : Mar 22, 2019, 11:35 PM IST


சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து, தோனி,ரோஹித் சர்மா ஆகியோரை ஒப்பிடுகையில் ஐபிஎல் கோப்பையை வெல்லாத கோலி பெரிய கேப்டன் அல்ல எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கோலியிடம் இதுகுறித்து கேட்டபோது, நிச்சயம் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தான் விளையாடுகிறோம். ஆனால் அது இன்னும் கைகூடவில்லை. இதனை வைத்து எனது கேப்டன்சியை பற்றி எடை போட்டால், நான் கவலைகொள்ளப் போவதில்லை.

இதுவரை ஐந்துமுறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளோம். சரியான முடிவுகளை எடுத்ததால் தான் தொடரை வெல்வதற்கு அருகில் செல்லமுடிந்தது. ஐபிஎல் கோப்பையை வெல்லாததற்கு நான் எந்த விளக்கத்தையும் கூற விரும்பவில்லை. அனைத்து கோபைகளையும் வெல்வதற்கும் எனக்கு ஆசைதான். இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான முயற்சியை தொடர்ந்து செய்கிறோம் என கம்பீருக்கு பதிலடிக் கொடுத்துள்ளார்.

நாளை தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சென்னை - பெஙகளூர் அணிகள மோதுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details