தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த கொல்கத்தா! - ஹர்திக் பாண்டியா

கொல்கத்தா: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணி 34  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த கொல்கத்தா!

By

Published : Apr 29, 2019, 12:00 AM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 46ஆவது லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை குவித்தது. கிறிஸ் லின் 54, ஷுப்மன் கில் 76, ரஸல் 80 ரன்களை அடித்தனர்.

இதைத்தொடர்ந்து, 233 ரன் என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. டி காக் (0), அணியின் கேப்டன் ரோஹிஷ் ஷர்மா (12), இவின் லிவிஸ் (15), சூர்ய குமார் யாதவ் (26) என சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால், மும்பை அணி 8.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்களை எடுத்திருந்தது.

இந்நிலையில், பொல்லார்ட் உடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா, அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார். மறுபக்கம் பொலார்ட் 20 ரன்களுக்கு நடையைக் கட்டியதால், மும்பை அணியின் வெற்றிக்கு 40 பந்துகளில் 133 ரன்கள் தேவைப்பட்டது.

ஹர்திக் பாண்டியா

இந்த இக்கட்டான தருணத்தில் மனம் தளராத ஹர்திக் பாண்டியா, தனி ஒருவராக போராடினார். கொல்கத்தா அணியின் பந்துவீச்சை எதிர்கொண்ட அவர் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பறக்கவிட்டார். 34 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டிய 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, குருணால் பாண்டியா 24 ரன்களுக்கு நடையைக் கட்டியதால், மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால், கொல்கத்தா அணி இப்போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம், அந்த அணி சந்தித்து வந்த 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதைத்தவிர, மும்பை அணியுடன் தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வி அடைந்ததற்கும், தக்க பதிலடி கொடுத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details