12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 52ஆவது லீக் போட்டி, மொகாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச தீர்மானித்தார். கடந்தப் போட்டியில் மும்பை அணியுடன் விளையாடிய அதே 11 வீரர்களுடன் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது. மறுமுனையில், பஞ்சாப் அணியில் மில்லர், முஜிப்-உர்-ரஹ்மான் ஆகியோருக்கு பதிலாக, சாம் கரன், ஆன்ட்ரூவ் டை அணியில் இடம்பெற்றுள்ளனர்.