தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சின்ன 'தல' சாதனையை முறியடித்த கிங் கோலி

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த சென்னை வீரர் ரெய்னாவின் சாதனையை பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முறியடித்துள்ளார்.

By

Published : Apr 6, 2019, 11:23 AM IST

சின்ன தல சாதனையை முறியடித்த கிங் கோலி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் பெங்களூரு- கொல்கத்தா அணிகள் மோதின.

இதில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழந்து 205 ரன்களை குவித்தது. இப்போட்டியில் ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 49 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 84 ரன்களை விளாசினார். இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த சென்னை வீரர் ரெய்னாவின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

168 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி இதுவரை 5110 ரன்களை எடுத்து ரன் குவிப்பில் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சென்னை வீரர் ரெய்னா 180 போட்டிகளில் 5086 ரன்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள போட்டியில் ரெய்னா, விராட் கோலியின் சாதனையை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்களை குவித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். முன்னதாக, இச்சாதனையை ரெய்னா முதலில் படைத்தார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் யுனிவர்ஸல் பாஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். இப்பட்டியலில் இந்திய வீரர் ரெய்னா 6ஆவது இடத்திலும், கோலி 7ஆவது இடத்திலும் உள்ளனர்.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியல்

  1. கெயில் - 12,457 ரன்கள்
  2. மெக்கல்லம் - 9922 ரன்கள்
  3. பொலார்ட்- 9087 ரன்கள்
  4. சோயிப் மாலிக் - 8701 ரன்கள்
  5. வார்னர் - 8375 ரன்கள்
  6. ரெய்னா - 8110 ரன்கள்
  7. விராட் கோலி - 8067 ரன்கள்

ABOUT THE AUTHOR

...view details