தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கவாஸ்கரை கலாய்த்த கெவின் பீட்டர்ஸன்! - troll

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சுனில் கவாஸ்கரை, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்ஸனை கலாய்த்து அவரது ட்விட்டர் பக்கத்தில் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சுனின் கவாஸ்கருடன் பீட்டர்ஸன்

By

Published : Mar 27, 2019, 11:25 AM IST

ஐபிஎல் தொடர் என்றாலே வீரர்கள் முதல் வர்ணனையாளர்கள் வரை அனைவரும் ஏதேனும் குறும்புகளை செய்வதுண்டு. ஒவ்வொரு முறை ஐபிஎல் தொடர் நடைபெறும்போது மைதானத்தில் அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுகளை நாம் பார்த்து வருகிறோம்.

2019 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கார், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் ஆகியோர் வர்ணனையாளர்களாக(கமென்டேட்டர்) இருந்தனர்.

அப்போது, டாஸ் போடுவதற்கு முன்பாக வழங்கப்பட்ட நிகழ்ச்சியில், வர்ணணையில் ஈடுபட்டிருந்த சுனில் கவாஸ்கர் தன்னைக் காட்டிலும் உயரமான கெவின் பீட்டர்ஸனை விட உயரமாகத்தெரிய வேண்டும் என்பதற்காக, அங்கிருந்த இரும்பு பெட்டியின் மேல் நின்று வர்ணனை செய்துள்ளார்.

இந்த குறும்பத்தனமான செயல்பாட்டில் ஈடுபட்ட சுனில் காவஸ்கரின் புகைப்படத்தை, பீட்டர்ஸன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கலாய்த்துள்ளார். பல ஆண்டுகளாக வர்ணனையாளராக இருந்து வரும் சுனில் கவாஸ்கர், நகைச்சுவையாக வர்ணனைசெய்வது மட்டுமல்லாது, அவரின் கிரிக்கெட் அனுபவங்களையும் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details