ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில், சென்னை அனி பேட்டிங்கின்போது 6-வது ஓவரில் தோனி சந்தித்த முதல் பந்து உடலில் பட்டு ஸ்டெம்பின் மீது பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பைல்ஸ் கீழ் விழாததால் தோனி அவுட்டாகாமல் தப்பித்தார். பின்னர் அந்தப் போட்டியில் தோனி அதிரடியாக ஆடி 46 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
கர்மா இஸ் எ பூமராங்; இது தோனிக்கும் பொருந்தும்! - ராஜஸ்தான் vs சென்னை
சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், தொடக்க வீரர் கே.எல். ராகுலை தோனி அபாரமாக ரன் அவுட் செய்தபோது, அதிர்ஷ்டவசமாக பைல்ஸ் விழாததால் ராகுல் தப்பித்ததால், ரசிகர்கள் கர்மா இஸ் எ பூமராங் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
கர்மா
அதேபோல், நேற்று நடைபெற்ற பஞ்சாப் - சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில், பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ராகுல் தோனியால் ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக பைல்ஸ் கிழே விழவில்லை. இதனைப் பயன்படுத்தி ராகுல் அரைசதம் அடித்தார். இருப்பினும் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தோனிக்கு பைல்ஸ் விழாததுபோல், ராகுலுக்கும் ஆனாதால் கர்மா இஸ் எ பூமராங் (karma is a boomerang) என இணையத்தில் கிரிக்கெட் பார்வையாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.