பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மோதிய நேற்றையப் போட்டியில், ராஜஸ்தான் வீரர் பட்லரை பஞ்சாப் கேப்டன் அஷ்வின், மன்கட் முறையில் ரன் அவுட் செய்து ஆட்டமிழக்க செய்தார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
'ஐசிசி விதியின்படியே செயல்பட்டேன்' - அஷ்வின்! - மன்கட்
'மன்கட்' முறையில் பட்லரை ஆட்டமிழக்க செய்த அஷ்வின், ஐசிசி விதியின்படியே செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அஷ்வின்
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அஷ்வின், "ஐசிசி விதியின் அடிப்படையிலேயே மன்கட் முறையில் ரன் அவுட் செய்து அம்பயரிடம் அப்பீல் செய்தேன். மூன்றாம் நடுவர் அவுட் என அறிவித்தார். பந்துவீசுவதற்கு முன்னர் கிரீஸைவிட்டு வெளியேறினால் பேட்ஸ்மேன்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்", என்றார்.
மன்கட் முறையில் பட்லரை, அஷ்வின் ரன் அவுட் செய்ததற்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.