தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு; பெங்களூரு பேட்டிங்! - CSKvRCB

பெங்களூரு : ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் போட்டியின் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

RCBvCSK

By

Published : Apr 21, 2019, 7:53 PM IST


ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. அதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சென்னை அணியில் காயம் காரணமாக விளையாடாத பிராவோ அணிக்கு திரும்பியுள்ளது பந்துவீச்சில் பலத்தை அதிகரித்துள்ளது. கடந்தப் போட்டியில் விளையாடாத தோனி இன்று களமிறங்கியுள்ளார். இவர்களுக்கு பதிலாக சான்ட்னர், கரன் ஷர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் கடந்தப் போட்டியில் காயம் காரணமாக களமிறங்காத டி வில்லியர்ஸ் இப்போட்டியில் இடம்பெற்றுள்ளார். இவருக்கு பதிலாக கிளாஸன் நீக்கப்பட்டுள்ளார்.

இருஅணிகளுக்கிடையே மிகப்பெரிய ரிவல்ரி உள்ளதால் இன்று நடைபெறும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.

சென்னை அணி விவரம்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, வாட்சன், டூ ப்ளஸிஸ், ராயுடு, ஜடேஜா, தாஹிர், சாஹர், தாகூர், பிராவோ, கேதர் ஜாதவ்.

பெங்களூரு அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), மொயின் அலி, பார்திவ் படேல், மார்கஸ் ஸ்டோனிஸ், பவன் நெகி, நவ்தீப் சைனி, சாஹல், டி வில்லியர்ஸ், ஸ்டெயின், உமேஷ் யாதவ், அக்‌ஷ்தீப் நாத்.

ABOUT THE AUTHOR

...view details